கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள். சங்கீதம் 34:8

Join Our Whatsapp Group for Gettng Latest Updates

இன்றைய தியானம் - 03.10.2019“ - “...என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.” – சங்கீதம் 23:5

இன்றைய தியானம் 

03-10-2019

“...என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.” – சங்கீதம் 23:5

இப்பதிவானது கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர் அவர்களின் பதிவிலிருந்து பகிரப்படுகிறது.

நன்றி ! கிராம மிஷனெரி இயக்கம்

என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.” இது ஆடு மேய்த்த தாவீதின் இருதயத்திலிருந்து பொங்கி வழிந்த வார்த்தைகள். மேய்ப்பனான தாவீதை ஆண்டவர் சகோதரர்களின் நடுவே ராஜாவாக அபிஷேகம் பண்ணினார். அவர் பாடின இந்த 23ம் சங்கீதம் எல்லா வயதினரும் விரும்பி படிக்கும் சங்கீதம். என் பாத்திரம் என்று அவர் சொல்வது அவரது உள்ளம் தேவ அன்பினால் நிரம்பி வழிவதைக் குறிக்கிறது.

 தாவீதின் இருதயம் நிரம்பி வழியும் பாத்திரமாய் இருந்தது. அப்படியென்றால் வெறுமையான பாத்திரம், பாதி நிரம்பின பாத்திரம், நிரப்பப்பட்ட பாத்திரம் போன்ற இருதயம் மனிதர்களுக்குள் உண்டு என்பதை அறிந்துகொள்ளலாம். 1. எப்போதும் தேவையுள்ள இதயம். சமாதானமில்லை, சுகமில்லை, நிம்மதியில்லை.... என வெறுமையை உணருகிறவர்கள் வெறுமையான பாத்திரம்.  2. ஏதோ இருக்கிறோம் என்ற திருப்தியற்ற நிலையோடிருப்பவர்கள் பாதி நிரம்பிய பாத்திரம்  3. நிரப்பப்பட்ட பாத்திரம் இவர்களுக்கு போதுமான அபிஷேகம், வல்லமை உண்டு; ஆனால் மற்றவர்களுக்கு எந்தவிதத்திலும் ஆசீர்வாதத்தை கொண்டு வராதவர்கள்.  4. நிரம்பி வழியும் பாத்திரம். இதற்கு உதாரணம்தான் தாவீது, யோசேப்பு போன்றோர்.

கொஞ்ச ஆடுகளை மட்டும் மேய்த்துக்கொண்டு, குடும்பத்தால் மறக்கப்பட்டவராக இருந்த தாவீதை தேவன் ராஜாவாக்கினார். அவரது ஆட்சிக்காலமே இஸ்ரவேலின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படக்கூடிய பொற்காலமாயிருந்தது. அவர் மூலம் தேசமே ஆசீர்வதிக்கப்பட்டதுஆம், நம் தேவன் அற்பமாய் சொற்பமாய் அல்ல, அபரிமிதமாய் ஆசீர்வதிப்பவர். யோசேப்பு எகிப்திற்கு அடிமையாக விற்கப்பட்டபோது வெறுமையான பாத்திரமாகத்தான் இருந்தார். கர்த்தர் அவரை எகிப்திலே உயர்த்தினபோது அவர் பாத்திரம் நிரம்பி வழிந்ததோடு மாத்திரமல்லாமல், எகிப்து தேசமே அவரைத் தேடிவரும்படியாக, அரண்மனை தானியக் களஞ்சியமும் நிரம்பி வழிந்தது.

பிரியமானவர்களே! உங்கள் இருதயமும் வாழ்வும் எப்படி இருக்கிறது? ஒருவேளை வெறுமையாய் இருக்கிறதோ? அன்று பேதுருவின் வலையும் படகும் வெறுமையாய் இருந்ததுஆனால் பேதுரு தன் படகை ஆண்டவருக்குக் கொடுத்தபோது  வலை கிழியத்தக்கதாய் மீன்கள் நிரம்பி வழிந்தது. உங்களை உள்ளபடியே தேவகரத்தில் ஒப்புக்கொடுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதித்து அநேகருக்கு ஆசீர்வாதத்தின் வாய்க்காலாய் மாற்றுவார். நீயோ அநேகருக்கு கடன் கொடுப்பாய். ஆனால் கடன் வாங்காதிருப்பாய் என்ற வாக்கின்படி இப்புதிய மாதத்திலே நிரம்பி வழியும் பாத்திரமாய் தேவன் உங்களை மாற்றுவார்.

Mrs. ஐரின் வாக்கர்

 ஜெபக்குறிப்பு:

மோட்சப் பயணம் மாத இதழ் மூலம் அநேகர் பக்திவிருத்தியடைய, சத்தியத்தில் வளர ஜெபியுங்கள்.        

No comments:

Post a Comment