கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள். சங்கீதம் 34:8

Join Our Whatsapp Group for Gettng Latest Updates

இன்றைய தியானம் - 30.09.2019“ - வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்று....” - சங்கீதம் 118:22, 23

இன்றைய தியானம் 

30-09-2019

வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லேமூலைக்குத் தலைக்கல்லாயிற்றுஅது கர்த்தராலே ஆயிற்று....”  - சங்கீதம் 118:22, 23...

இப்பதிவானது கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர் அவர்களின் பதிவிலிருந்து பகிரப்படுகிறது.

நன்றி ! கிராம மிஷனெரி இயக்கம்

இஸ்ரவேலின் முதல் அரசன் சவுல். அவனது கீழ்ப்படியாமையின் காரணமாக தேவன் அவனைப் புறக்கணித்தார். அடுத்து தாவீதை அரசனாக்க தேவன் முடிவு செய்தார். எனவே தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் வீட்டிற்குப் போகும்படி தேவன் சாமுவேலிடம் கூறினார். அப்போது, தான் தெரிந்துகொண்டவனை அபிஷேகம் செய்யும்படியும் கூறியிருந்தார். அதன்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

ஈசாயிக்கு எட்டுக்குமாரர்கள். அவர்களில் ஏழுபேர் அழைக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் அனைவரும் அரசாங்க பணியில் இருந்தார்கள். சாமுவேல், இவர்களில் ஒருவனை அபிஷேகிப்பார் என்று நினைத்தார்ஆனால் ஆண்டவர் இந்த ஏழுபேரையும் நிராகரித்தார். அப்போது சாமுவேல், “வேறு யாரும் உன் பிள்ளைகள் இருக்கிறார்களா?” என ஈசாயிடம் கேட்டார். அப்போது எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான் என ஈசாய் மிக அலட்சியமாகக் கூறினான்அவன் பெயரைக்கூட அவன் தகப்பன் சொல்லவில்லை. காரணம்....

தாவீது வேற்றுமை பாராட்டப்பட்டவன்:    அவன் ஆடு மேய்ப்பதால் அவன் தகப்பனால் வேற்றுமை பாராட்டப்பட்டான். அவன் தகப்பன் அவன் பெயரை சொல்லக்கூட விரும்பவில்லைதாவீதின் தொழில் அற்பமானது. அநேக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குள்ளேயே வேற்றுமை பாராட்டுகிறவர்களாக இருக்கிறார்கள். இன்றும் பல குடும்பங்களில் இந்த வேற்றுமை பாராட்டுதல் உள்ளது. அழகானவர்கள், திறமையுள்ளவர்கள், நன்கு படிப்பவர்கள் என தங்கள் பிள்ளைகளுக்குள்ளேயே வேற்றுமை பாராட்டுகிறவர்களாக இருக்கிறார்கள். நம் தேவன் அற்பமானவர்களையும் உயர்த்தி அவர்களையும் கனப்படுத்தும் தேவன்.

தாவீது புறக்கணிக்கப்பட்டவன்:   அவன் அனைவரிலும் சிறியவன். அவன் தொழில் எளியது. அவன் சகோதரர் அரசாங்கப் பணியில் யுத்த வீரர்களாக இருந்ததால் அவர்களுக்கு நல்ல உடற்கட்டு இருந்ததுஆனால் தாவீதிடம் சிறப்பாக சொல்லிக்கொள்ளக்கூடிய அளவில் பெருமைக்குரிய காரியங்கள் எதுவும் இல்லை என அவன் பெற்றோர்கள் முடிவு செய்திருந்தார்கள்ஆனால் தேவன் அவனைப் புறக்கணிக்கவில்லை. இன்று நம்மை நம் குடும்பத்தினர் புறக்கணித்திருக்கலாம். ஆனால் நம் தேவன் நம்மை ஒருபோதும் புறக்கணியாதவர்.

தாவீது அற்பமாக எண்ணப்பட்டவன்வயது குறைவானவன். சிறந்த பணி எதுவும் இல்லை. எனவே அவனுக்கு அவன் பெற்றோர் எந்த மதிப்பும் கொடுக்கவில்லை. இன்று உலகம் நம்முடைய வெளிப்புறத் தோற்றம், உயர்ந்த பணி, செல்வச் செழிப்பு இவற்றிற்கே முதலிடம் கொடுக்கிறது. கனத்தைக் கொடுக்கிறதுஆனால் தேவன் நம்முடைய இருதயத்தையே காண்கிறவராக இருக்கிறார். மனிதன் முகத்தையும் சரீர வளர்ச்சியையும் மட்டுமே பார்க்கிறான். மனிதன் பார்ப்பதற்கும் தேவன் பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு.

இன்று நாம் ஒருவேளை தாவீதைப்போல இருக்கலாம். நம் பெற்றோர் நம் மீது வேற்றுமை பாராட்டி நம்மைப் புறக்கணித்து மற்றவர்களுக்கு முதலிடம் கொடுக்கலாம்ஆனால் தேவன் ஒருபோதும் நம்மைப் புறக்கணிக்கவோ, வேற்றுமை பாராட்டவோ, அற்பமாக எண்ணவோ மாட்டார். குடும்பத்தால் அற்பமாக எண்ணப்பட்ட தாவீதின் பெயரை 1083 முறை வேதத்தில் எழுதி வைத்து தேவன் அவனைக் கனப்படுத்தியுள்ளார் என்பதே அதற்கு சான்றுஇன்று தேவன் நம்மை கனப்படுத்தி உயர்த்தக் காத்துக்கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.

K.M. பிரசாத்

 ஜெபக்குறிப்பு:

இவ்வூழியத்தை தாங்கும் பங்காளர் குடும்பங்களை தேவன் ஆசீர்வதிக்க; புதிய பங்காளர்களை தேவன் எழுப்பித் தர ஜெபியுங்கள்.
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

No comments:

Post a Comment