கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள். சங்கீதம் 34:8

Join Our Whatsapp Group for Gettng Latest Updates

இன்றைய தியானம் - 28.09.2019 “...அவர் நாமம்...சமாதானப்பிரபு என்னப்படும்.” – ஏசாயா 9:6

இன்றைய தியானம் 

28-09-2019

“...அவர் நாமம்...சமாதானப்பிரபு என்னப்படும்.” – ஏசாயா 9:6

இப்பதிவானது கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர் அவர்களின் பதிவிலிருந்து பகிரப்படுகிறது.

நன்றி ! கிராம மிஷனெரி இயக்கம்


“...அவர் நாமம்...சமாதானப்பிரபு என்னப்படும்.” – ஏசாயா 9:6

    இன்றைய காலகட்டங்களில் வாழும் மக்களுக்கு சமாதானம் என்பது எட்டாக்கனியைப் போலவே காணப்படுகிறதுஆம், ஒவ்வொரு மனிதனின் இருதயமும் நிரந்தரமான சமாதானத்திற்காய் ஏங்குகிறது என்றால் அது உண்மையே. அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைக் காண்போம்.

  ஜிம்மி ஹன்ரிக் ஒரு புகழ்பெற்ற கிட்டார் இசைக்கலைஞர். 1970ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த தனது இசை நிகழ்ச்சியின் முடிவில் ஜிம்மி தன் கிட்டாரை உடைத்துப்போட்டார். அரங்கத்திலிருந்த அனைவரும் இதைக் கண்டு கண்கலங்கினர், கதறினர். திடீரென்று அந்த மண்டபத்தில் ஒரு நிசப்தம் நிலவியது. மேடையில் முழங்காலில் விழுந்த ஜிம்மி அப்படியே அசையாமல் இருந்தார். பிறகு அமைதியை குலைத்தவராகஉங்களுக்கு மெய்யான சமாதானத்தைப் பற்றித் தெரியுமானால் அதை எனக்குக் கூறுங்கள். அதைப்பற்றி அறிந்துகொள்ள ஆவலாயிருக்கிறேன். அதை பின்பற்ற விரும்புகிறேன்என்று சத்தமிட்டு கூறினார். புகழ்பெற்றவராய் இருந்தும் ஒழுக்கக்கேடான வாழ்க்கை வாழ்ந்த அவர் இது நடந்து ஒரு சில நாட்களில் அதிகமான போதை மருந்தை உட்கொண்டபடியால் இறந்துபோனார். இவரைப் போல சமாதானத்திற்காக ஏங்கும் அநேக கோடீஸ்வரர்கள் உண்டு. புகழின் உச்சியில் உள்ளோர் உண்டு.

    இப்படி சமாதானத்திற்காக ஏங்கும் மக்களை கருத்தில் கொண்டு இந்த உலகம் அநேக போலி சமாதானங்களை காண்பிக்கிறது. மக்களும் எங்காவது நிம்மதி கிடைத்துவிடாதா என்று அலைமோதுவதால் மது அருந்தியும், சினிமா தியேட்டர்களிலும், கேளிக்கை விடுதிகளிலும் சென்று தங்களை மேலும் கெடுத்துக்கொள்கிறார்கள். இதைக்குறித்து நம் இரட்சகர் கூறுகிறதென்ன? “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன். என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்கு கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும், பயப்படாமலும் இருப்பதாகஎன்கிறார்.  ஆம், நம் தேவன் உலகிலுள்ள அனைவருக்கும் சமாதானத்தைத் தர வல்லவர். ஒருவேளை நீங்கள் பாவத்தினால் சமாதானத்தை இழந்திருக்கலாம். அல்லது குடும்ப பிரிவினை, தொழில் பிரச்சனை எதுவாக இருந்தாலும் சரி இன்று அவரிடம் முழுமையாய் உங்களை அர்ப்பணிக்கும்போது அவர் இலவசமாய் சமாதானத்தை தர ஆயத்தமாய் இருக்கிறார். அப்பொழுது உங்கள் உள்ளம் சந்தோஷத்தினாலும், சமாதானத்தினாலும் நிரம்பும்.

P. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:


ஜெபக்குறிப்பு:
திறப்பிலே நிற்கும் 100 எஸ்தர் ஜெபக்குழுக்கள் மாவட்டங்கள்தோறும் எழும்ப ஜெபியுங்கள்
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

No comments:

Post a Comment