கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள். சங்கீதம் 34:8

Join Our Whatsapp Group for Gettng Latest Updates

இன்னும் எத்தனை தூரம் பயணம் - Pas. Moses Rajasekar - பாடல் வரிகள்

PLAY & DOWNLOAD இன்னும் எத்தனை தூரம் - MP3 SONG

Innum ettanai turam payanam ceyyanum nata

இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா - 2
என்னால் முடியவில்லை முடியவில்லை நாதா
உம் பெலன் தந்து தாங்க வேண்டும் நாதா - 2
தேவா இயேசு தேவா ..... - 2 - இன்னும்

சரண்ங்கள் 

1. கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள் - 2
உருண்டு புரண்டு எனை விழுந்திட செய்யுதே
விடாத மனமொடிந்து நடந்திடும் என்னையும் - 2
வழுவாமல் வழி நடத்தி செல்லணும் என் தேவனே
நாதா இயேசு தேவா ..... - 2 - இன்னும்

2. அக்கினி கடல்தனில் நடந்து நான்  செல்கையில்
ஆக்கினை அணுகாது காக்கும் என் தேவனே - 2
அலைபோல் வெள்ளம் என் மேல் புரண்டு வந்தாலும்
மலை போல் வந்து நின்று தடுக்கும் என் தேவனே - 2
நாதா இயேசு தேவா .... -2 - இன்னும்

3. உறவுகள் உதறும் போது உந்தன் மார்பில் சாய்குவேன்
விழிகளில் கண்ணீரோடு உந்தன் பாதம் சேருவேன்
மார்போடு அணைத்து என்னை முத்தமிடும் தெய்வமே
மறவாத உந்தன் அன்பை நினைத்து நான் ஏங்குவேன்
நாதா இயேசு தேவா .... -2 - இன்னும்

No comments:

Post a Comment