கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள். சங்கீதம் 34:8

Join Our Whatsapp Group for Gettng Latest Updates

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே - Ambur Pastor Johnraj - பாடல் வரிகள்

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே
தந்தை வெறுத்தாலும் நீர் வெறுப்ப-தில்லையே-
தந்தை தாயினும் மேலானவர்
தாங்கியென்றும் நெஞ்சில் சுமப்பவர்-2

மேற்குக்கும் கிழக்குக்கும்
எவ்வளவு தூரமோ
அத்தனை தூரம் என் பாவம் அகற்றினீர்-2
-தாய் மறந்தாலும்

மலைபோன்ற எந்தன்
மாபெரும் பாவங்களை
முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டீரே - 2
-தாய் மறந்தாலும்

காலமெல்லாம் கண்ணீரை
வரவழைத்த பாவங்களை
கடலின் ஆழத்திலே போட்டு விட்டீரே - 2
-தாய் மறந்தாலும்

2 comments:

  1. Love you Jesus enaku eppavume neenga than appa u r my world

    ReplyDelete
  2. Podhum Podhum Paramanea Pattadhu Podhum Paramanae

    ReplyDelete